Saturday, May 18, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தெரிவித்து பதிலை பகிர்ந்த ஜனாதிபதி !

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தெரிவித்து பதிலை பகிர்ந்த ஜனாதிபதி !

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதம் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை இலங்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு கடனாளிகளிடமிருந்து உறுதிமொழிகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments