Sunday, March 3, 2024
Homeஇலங்கை செய்திகள்உயிர் காக்கும் உன்னத பணியில் யாழ். இளைஞர்கள், யுவதிகள்!

உயிர் காக்கும் உன்னத பணியில் யாழ். இளைஞர்கள், யுவதிகள்!

யாழ். வடமராட்சி கிழக்கு – கடைக்காடு பிரதேசத்தில் இன்று (11) இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் புனித கப்ரேந்திமாதா தேவாலய இளைஞர்கள் இணைந்து இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்று முற்பகல் 10.00 மணிக்கு கட்டைக்காடு மாரியல் மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வு வணக்கத்திற்குரிய அமல்ராஜ் அடிகளார் தலைமையில் அதிகாலை 02.00 மணி வரை இடம்பெற்றது.

உயிர் காக்கும் உன்னத பணியில் ஏராளமான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

கடைக்காடு பகுதியில் முதன்முறையாக இம்முகாம் நிறைவடைந்துள்ளதாகவும் உயிர் காக்கும் உன்னதப் பணியில் தொடர்ந்து பங்கேற்பதாகவும் அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments