Friday, February 23, 2024
Homeஇந்திய செய்திகள்என் மீது காவி நிறம் பூச முடியாது …B.J.P திட்டத்தை தவிடு பொடியாக்கிய சூப்பர்...

என் மீது காவி நிறம் பூச முடியாது …B.J.P திட்டத்தை தவிடு பொடியாக்கிய சூப்பர் ஸ்டாரின் பேச்சு …

சென்னை: தன் மீது திருவள்ளுவரை போல் காவி நிறத்தை பூச பாஜக முயற்சித்துக்கொண்டே இருப்பதாகவும், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோவை தற்போது பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவகர்கள், மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு காவி சாயம் பூசி தங்களின் தலைவர்களாக காட்டி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், பாரதியார், முத்துராமலிங்க தேவர், காமராஜர், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை என பலருக்கு காவி சாயம் பூசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

திருவள்ளுவருக்கு காவி உடை:

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பதை போன்ற படங்களை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது. இதனை கண்டித்து பலரும் குரல் எழுப்பினர். திருவள்ளுவர் இதுவரை மதசார்பற்ற தமிழ் புலவராகவே அனைத்து தரப்பு மக்களாலும் பார்க்கப்பட்டு வந்த நிலையில் பாஜகவுக்கு அவருக்கு மத அடையாளத்தை கொடுப்பதாக குற்றம்சாட்டினர்.

தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு

பாஜகவின் இந்த செயல்பாட்டை கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்களும் வெடித்தன. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த இந்த செயலை கண்டித்து அரசியல் கட்சியினர், முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள் என பலரும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

ரஜினியிடம் பேட்டி


இந்த பிரச்சனை பூதாகரத்தில் இருந்தபோது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜகவில் சேர இருப்பதாக வெளியான தகவல்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “பிஜேபி கலரை என் மீது பூச முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

என் மீது காவி பூச முடியாது

திருவள்ளுருவருக்கு காவி பூசியதை போன்றே எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டாரு. நானும் மாட்ட மாட்டேன்.” என்று கூறினார். ரஜினிகாந்திற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை வைத்து தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் திட்டங்களை அப்போது பாஜக தீட்டியதாகவும், அப்போது ரஜினி தெரிவித்த இந்த கருத்து அவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து தனது ரசிகர்களை அழைத்து கட்சியை கட்டமைக்கும் வேலைகளில் இறங்கிய ரஜினிகாந்த், திடீரென கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அரசியலில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்து தனது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியடைய செய்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினி ரசிகர்கலின் சுவரொட்டிகள்

இந்த நிலையில்தான், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுவர்போல் கொண்டை, தாடி வைத்து ரஜினிகாந்தை வடிவமைத்த பாஜகவினர் திருவள்ளுவருக்கு பாஜகவினர் கொடுத்த காவி உடையை அணிவித்து வாழும் வள்ளுவரே என்றே குறிப்பிட்டு போஸ்டர்கள் அடித்து இருந்தார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளானது.

இணையத்திலே பரவுக்கும் பழைய வீடியோ

இதனிடையே சமீபத்தில் தனது ஆன்மீக அரசியலுக்கு அடித்தளமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரஜினிகாந்த் வெளியிட்ட பாபா படம் ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அவர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நேற்று தர்காவுக்கு காவி உடை அணிந்து சென்றார். இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு என் மீது காவி சாயம் பூச முடியாது என ரஜினி பேசிய பழைய வீடியோவை நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments