Sunday, March 3, 2024
Homeசினிமாஎலும்பும் தோலுமாக மாறிய ரோபோ சங்கர்! இந்த பழக்கம் தான் காரணம்… அம்பலமாகிய உண்மை !

எலும்பும் தோலுமாக மாறிய ரோபோ சங்கர்! இந்த பழக்கம் தான் காரணம்… அம்பலமாகிய உண்மை !

நடிகர் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக மாறியதற்கு காரணம் கடந்த 6மாதம் நடந்த நிகழ்வுகள் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனது கொமடியில் மக்கள் மனதில் குடிகொண்ட ரோபோ சங்கர் மிமிக்ரி கலைஞராகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் இவரை வெற்றி பெற வைத்தது இவரது பாடி லாக்குவேஜ் தான். ஆம் தனது கம்பீரமான உடம்பினால், ஆக்ஷனாலும் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் வரை கவர்ந்திருந்தார்.

இந்நிலையில் இவரது புகைப்படம் சமீபத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ரோபோ சங்கரின் கம்பீரம் என்றால் அவரது உடல் எடை தான். தற்போது உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.

ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பாதித்து இருந்ததாகவும், அது அவருக்கு ஆறு மாதங்களாக தெரியாமல் இருந்திருக்கிறது என்றும் பிறகு வெளிநாட்டிற்கு சூட்டிங் சென்றிருந்த இடத்தில் ரோபோ சங்கர்க்கு தீவிரமான வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நல பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் இதனால் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதே இவ்வளவு தீவிர பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. ரோபோ சங்கர் அதிகமான அசைவ உணவுகளையும், மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளதும் இதற்கு காரணம்.

தற்போது அவர் குணமடைந்து வரும் நிலையில், இவரது புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலே இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுக்கும் காட்சி வெளியாகி ரசிகர்களை சற்று மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments