கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் வகுப்பு பழைய மாணவர்கள் (1980) வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் ஒட்டுசுட்டானில் ஒரு விதவைக்கு இராணுவத்தால் புதிய வீடு கட்டப்பட்டுள்ளது.
புதிய வீடு திறப்பு விழா கடந்த 9ம் தேதி நடந்தது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடு கையளித்தார்.
