Saturday, May 18, 2024
Homeஉலக செய்திகள்சரிவை கண்ட டெஸ்லா நிறுவனம் -ஒரே ஆண்டில் ரூ.15 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்!!!

சரிவை கண்ட டெஸ்லா நிறுவனம் -ஒரே ஆண்டில் ரூ.15 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்!!!

உலகின் முன்னணி தொழிலதிபராக இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா மோட்டார், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளாரகவும் சிஇஓவாகவும் இவர் உள்ளார்.

அத்துடன் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். இது இந்திய மதிப்பின் படி ரூ.3.30 லட்சம் கோடி ஆகும்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அவரை சுற்றி சர்ச்சைகளும் களேபரங்களும் பரவத் தொடங்கின. டெஸ்லாவில் முதலீடு செய்தவர்களுக்கு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.

எலான் மஸ்க்கின் கவனம் ட்விட்டர் பக்கம் சென்றால் டெஸ்லாவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என டெல்ஸா முதலீட்டாளர்கள் கருதினர்.

இருப்பினும், அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி அதில் தொடர்ச்சியான மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் டெஸ்லா முதலீட்டாளர்கள் பின் வாங்கத் தொடங்கினர். எனவே, 2022இல் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் 65 சதவீத பங்குகள் சரிவை கண்டன.

இதன் காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 200 பில்லியன் டாலர் வீழ்ச்சி கண்டது. இந்திய மதிப்பின் படி இது சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் அதிக சொத்தை இழந்த நபர் என்ற கின்னஸ் சாதனையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments