Saturday, May 18, 2024
Homeசினிமாநடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படம்…இந்த கதாபாத்திரர த்திர்காக தினமும் பல மணி நேரம் செலவிடும்...

நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படம்…இந்த கதாபாத்திரர த்திர்காக தினமும் பல மணி நேரம் செலவிடும் விக்ரம்.

சியான் விக்ரம் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘தங்கலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்த பீரியட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சியான் விக்ரம் ‘தங்கலான்’ படத்திற்கு தயாராவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் சமீபத்தில் பகிந்துக் கொண்டார். அதாவது ‘தங்கலான்’ படத்தின் தனது தோற்றத்துக்காக தினமும் 4 மணி நேரம் செலவழித்து வருவதாகவும், ஒவ்வொரு காட்சியிலும் அன்புடனும் ஆர்வத்துடனும் அவர் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக கர்நாடகாவின் KGF-வில் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சியான் விக்ரம் மற்றும் படக்குழுவினருக்கு இது பிஸியான நாட்களாக இருக்கும். படம் 2023-ல் ஏதேனும் முக்கிய விழா காலத்தை முன்னிட்டு, திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தங்கலான் படத்தில் சியான் விக்ரம் தவிர, பார்வதி மேனன், மாளவிகா மோகனன், மற்றும் பசுபதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கேஜிஎஃப் பின்னணியில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ரஞ்சித்தின் கடைசிப் படமான ‘சர்பட்டா பரம்பரை’ மாபெரும் வெற்றி பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments