Saturday, May 18, 2024
Homeஇலங்கை செய்திகள்மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து சிறுவன் மரணம்!

மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து சிறுவன் மரணம்!

அம்பாறை மாவட்டம் ஆலையடி வேம்பில் மலம் கழிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரவிக்குமார் லத்தீஸ் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் குடும்பத்தினர் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதியில் வெட்டப்பட்ட குழியில் நிரப்பப்பட்ட தண்ணீரை மலம் கழிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனை அவதானித்த சிறுவனும் யாரும் காணாத நேரத்தில் குழியில் தண்ணீர் எடுக்க முயற்சித்துள்ளார். குறித்த சிறுவன் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments