Wednesday, April 17, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் இடம்பெற்ற திடீர் தீ விபத்து ! யாரும் கண்டுகொள்ளவில்லை என பொது மக்கள் விசனம்...

முல்லைத்தீவில் இடம்பெற்ற திடீர் தீ விபத்து ! யாரும் கண்டுகொள்ளவில்லை என பொது மக்கள் விசனம் !

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் இரவு திடீரென குப்பி விளக்கு தீப்பற்றியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்றிரவு (19.05.2023) 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தற்காலிக வீட்டின் ஒரு பகுதியும் வீட்டில் இருந்த ஆடைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள், 45 ஆயிரம் ரூபாய் பணம் என்பன தீயில் எரிந்து சேதமாகின.

இந்த சம்பவம் தொடர்பாக தமது பகுதி விசுவமடு மேற்குகிராம அலுவலருக்கு தெரிவித்திருந்த போதிலும் கிராம சேவையாளர் வந்து பார்வையிடவில்லை எனவும் தமது வீடு எரிந்தது தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரும் இச்சம்பவம் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறியிடும் வீட்டார், தற்பொழுது அயல் வீட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments