Wednesday, April 17, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்! கதவடைப்பு போராட்டத்தை பேஸ்புக்கில் எதிர்த்தவரின் தந்தை நடு வெயிலில் அலைச்சல்...

யாழில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்! கதவடைப்பு போராட்டத்தை பேஸ்புக்கில் எதிர்த்தவரின் தந்தை நடு வெயிலில் அலைச்சல் !

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில, தொல்லியல், மத ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வடக்கு, கிழக்கில் கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் தரப்பினால் அறிவிக்கப்ப்ட கடந்த சில கதவடைப்பு போராட்டங்கள் வடக்கு, கிழக்கு தழுவியதாக இருந்திருக்காத நிலையில், இன்றைய கதவடைப்பு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய கதவடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்ப்பு பிரச்சாரங்களை அரச ஆதரவாளர்கள் முடுக்கி விட்டிருந்தனர். புலனாய்வாளர்கள் நேரடியாக சென்று போலிப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஐ.தே.கவினர், தமிழ் கட்சியொன்றின் ஆதரவாளர்கள், பொதுஜன பெரமுனவினர் என சிறிய குழு கூட்டாக சமூக ஊடக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும், அந்த பிரச்சாரத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லை.

அரச ஆதரவாளர்களின் போலிப்பிரச்சாரம் கதவடைப்பு போராட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியராத நிலையில், இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவரின் தந்தையே இந்த பிரச்சாரத்தினால் நொந்து போன சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

இன்று, யாழ் நகரில் செய்தி சேகரித்த செய்தியாளர்கள் சிலர், நகருக்கு வெளியே வீதியோரமாக நின்ற போது, முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் களைத்துப் போய் வந்துள்ளார்.

செய்தியாளர்கள் நின்ற பகுதிக்கு வந்த முதியவர், இன்று கதவடைப்பு இடம்பெறாது என சொன்னார்களே, பிறகு ஏன் திடீரென கடைகளை பூட்டினார்கள் என வினவியுள்ளார்.

இன்று கதவடைப்பு நடைபெறுமென கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகிறதே, பத்திரிகை வாசிப்பதில்லையா என செய்தியாளர்கள் கேட்டனர்.

கதவடைப்பு என பத்திரிகைகளில் செய்தி வாசித்து, வீட்டிற்கு தேவையான பொருட்களை நேற்றே வாங்கி வைத்து விட்டதாக தெரிவித்த முதியவர், இன்று கதவடைப்பு இடம்பெறாது என தனது மகன் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

அதனால் மதுபானம் வாங்குவதற்காக கொக்குவிலில் இருந்து யாழ் நகர் வரை தேடி களைத்து விட்டதாக தெரிவித்தார்.

தாங்கள் சிலர் பேஸ்புக்கில் கதவடைப்பு பிழையென எழுதியதாகவும், அதனை பெரியளவில் எல்லோரும் ஆதரித்தார்கள், அதனால் கதவடைப்பு பிசுபிசுக்கும், நீங்கள் நம்பி கடைக்கு செல்லலாம் என மகன் குறிப்பிட்டதாக அந்த முதியவர் தெரிவித்தார்.

அந்த தகவல் தவறானது என முதியவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, மகனை திட்டியபடி புறப்பட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments