Saturday, May 18, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் பசுமாடுகளின் உயிரை காப்பாற்றிய பொலிஸார் !

யாழில் பசுமாடுகளின் உயிரை காப்பாற்றிய பொலிஸார் !

யாழ்ப்பாணம் பருத்திப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாவதி பகுதியில் இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக இருந்த நான்கு மாடுகளை பருத்திப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில்

சப்-இன்ஸ்பெக்டர் நாமல், சப்-இன்ஸ்பெக்டர் சேந்தன், போலீஸ் கான்ஸ்டபிள்கள் தரங்கா, போலீஸ் கான்ஸ்டபிள் ரெ. திலோஜன், பொலிஸ் கான்ஸ்டபிள் பிரேமகாந்தன் நிசங்க, பொலிஸ் சார்ஜன்ட் ஏக்கநாயக்க ஆகியோர் நடவடிக்கை எடுத்து இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக இருந்த நான்கு மாடுகளை மீட்டனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது

அண்மைய நாட்களாக பசுக்கள் வெட்டப்படுவதாக தமக்கு கிடைத்த தொடர் முறைப்பாடுகளின் அடிப்படையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments