யாழ்ப்பாணம்-வலிகாமம் வடக்கு தையிட்டியில் இறுதி நாளான இன்று (05.05.2023).
மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு தைட்டி விகாரையில் பௌத்த கொடிகள் பறக்கவிடப்படுவதுடன் விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
14 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் காணியை விடுவிக்கக் கோரியும், சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்தக் கட்டிடத்தை அகற்றக் கோரியும், பௌத்த மயமாக்கலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தைத்திடி விகாரையை அகற்றுமாறு கோரி கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது.