Monday, March 4, 2024
Homeஇந்திய செய்திகள்10 அமைச்சர்களுக்கு துறை மாற்றம்… உதயநிதி ஸ்டாினுக்கு என்ன துறை தெரியுமா?

10 அமைச்சர்களுக்கு துறை மாற்றம்… உதயநிதி ஸ்டாினுக்கு என்ன துறை தெரியுமா?

தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தனித்துறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9:30 மணிக்கு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சராக பதவி ஏற்றபின் மேடையில் முதலமைச்சரின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார்.

முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக சென்னை தலைமை செயலகத்தில் அவரது அறையில் உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் கீழே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments