Friday, February 23, 2024
Homeஅரசியல்செய்தி140 பேரை பலி வாங்கிய பாலம் …திடீரென அறுந்து விழுததால் நடந்த கொடூரம் …அதே தொகுதியில்...

140 பேரை பலி வாங்கிய பாலம் …திடீரென அறுந்து விழுததால் நடந்த கொடூரம் …அதே தொகுதியில் பா. ஜா. கா. அமோக வெற்றி

காந்திநகர்: குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்த நிலையில், இந்த பாலம் அமைந்துள்ள தொகுதியில் பாஜக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்.

குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதில் பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல காங்கிரஸ் வரலாற்று தோல்வியை பெற்றிருக்கிறது.

இந்த தேர்தலில் வேலையின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம், சீன ஆக்கிரமிப்பு ஆகிய பிரச்னைகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச முதலமைச்சர்கள் மற்றும் அமித்ஷா போன்ற முக்கிய அமைச்சர்களையும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக களமிறக்கியது. எல்லாம் ஸ்மூத்தாக போய்க்கொண்டிருக்கையில் திடீரென மோர்பி பகுதியில் இருந்த நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த தொங்கு பாலம் ஒன்று அறுந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் சுமார் 140 பேர் உயிரிழந்தனர். இது பெரிய விவாதத்தை கிளப்பியது.

விபத்து குறித்து மாநில உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. வழக்கு விசாரணையில் மோர்பி நகராட்சியையும் மாநில அரசையும் கடுமையாக சாடியது. விபத்து காரணமாக இதுவரை முக்கிய புள்ளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கடைநிலை ஊழியர்கள்தான். மட்டுமல்லாது இந்த பாலத்தை பராமரிக்க ஒரேவா குழுமத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் இதற்கான டெண்டர் விடப்படாமல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மீண்டும் பரிமாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. அதேபோல இந்த வழக்கு குறித்து நோட்டீஸ் அனுப்பியும் நகராட்சி அதிகாரிகள் ஆஜராகாதது அதிர்ச்சியளிப்பதாகவும் இந்த வழக்கிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பி விடலாம் என்று அவர் நினைக்கிறார்கள் என்றும் நீதிமன்றம் குற்றம் சாட்டியது

இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முடிவுகளின்படி மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் கண்டிலாலா அம்ருதியா சுமார் 62,079 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மோர்பி பாலம் அறுந்து விழுந்தபோது உடனடியாக ஆற்றில் குதித்து மக்களை மீட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை வேகமாக பரவின. இதனையடுத்து இந்த தொகுதியின் எம்எல்ஏவாகவும் கேபினேட் அமைச்சராகவும் இருந்த ப்ரிஜேஷ் மிஸ்ராவுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு அம்ருதியாவுக்கு சான்ஸ் வழங்கப்பட்டது. அம்ருதியா ஏற்கெனவே இந்த தொகுதியில் 1995-2012 என 5 முறை எம்எல்ஏவாக பணியாற்றி இருக்கிறார். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு இவருக்கு பதிலாக மிஸ்ராவை பாஜக களம் இறக்கியது.

இவருக்கு எதிராக காங்கிரஸ் ஜெயந்தி படேலையும், ஆம் ஆத்மி பங்கஜ் ரன்சாரியாவையும் களம் இறக்கி இருந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக அம்ருதியா அமோக வெற்றி பெற்றிருக்கிறார். இதே போன்று பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பாஜக தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை அமைக்கிறது. குஜராத் சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் எந்த கட்சியும் இதுவரை 150 தொகுதிகளை கைப்பற்றியதில்லை. ஆனால் தற்போது பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. அதேபோல கடந்த 1962 முதல் காங்கிரஸ் இதுவரை ஒரு முறைகூட 30 தொகுதிகளுக்கு குறைவாக வெற்றிபெற்றதில்லை. ஆனால் இம்முறை வெறும் 17 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments