Friday, May 17, 2024
Homeஇந்திய செய்திகள்விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி.. உதவித்தொகை அதிகரிக்கப்படும்!

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி.. உதவித்தொகை அதிகரிக்கப்படும்!

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வாக்கு சேகரித்தார்.

அம்பசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திரிபுராவில் பாஜக ஆட்சி அமைந்த பிறகே, சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறினார். அதற்கு முன்பு காவல்நிலையங்கள் கம்யூனிஸ்ட்களின் கட்டுபாட்டில் இருந்ததாக குற்றம்சாட்டினார். மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் வருமானம் அதிகரிப்பதில் பாஜக கவனம் செலுத்தி வருவதாக கூறிய மோடி, உலகத்தரத்திற்கு திரிபுரா முன்னேறி உள்ளது என்றார். காங்கிரஸ் இடதுசாரி கூட்டணியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி மோசமான நிர்வாகத்திற்கு பேர் போனவர்கள் கைக்கோர்த்துக் கொண்டு இந்த தேர்தலில் நிற்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஒருவர் கூட வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை தோற்கடித்து முதல் முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை தோற்கடித்து முதல் முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இந்நிலையில், இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

அதேவேளை, பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலில் களமிறங்குகின்றன. 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments