Saturday, May 18, 2024
Homeஆன்மீகம்இன்றைய ராசி பலன் 14.02.2023

இன்றைய ராசி பலன் 14.02.2023

மேஷம்.
இன்று நீங்கள் வீட்டில் அதிக நேரம் செலவிட நினைப்பீர்கள், இதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவும், செயல்பாடுகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிலர் சோம்பேறித்தனமாக நாளைக் கழிப்பார்கள்.
கணவன் மனைவி உருவுக்குள் மகிழ்ச்சியும் அமைதியும் காணப்படும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வளர்ச்சிகரமானதாக இருக்கும்.

ரிஷபம்.
இன்று முதலீடு தொடர்பான விஷயங்களில் அதிக லாபத்தைப் பெறலாம். கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று பிஸியாக இருப்பீர்கள். தொழில் விஷயங்களில் கவனமாக இருங்கள், அப்போதுதான் அதனால் ஏற்படும் இழப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும்.

மிதுனம்.
இன்று வியாபாரத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்துவீர்கள். வேலை விஷயங்களில் இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். கணவன் மனைவி உறவுக்குள் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.

கடகம்.
இன்று தொழில் உத்தியோகத்தில் உங்கள் பணிகளில் சில தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி உறவுக்குள் உணர்ச்சிவயப்பட்ட மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. மேலும் நாளை உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். வேலையில் மிகவும் மேன்மை ஏற்படும்.

சிம்மம்.
இன்று சிம்ம ராசிக்காரர்கள் மனதில் புதிய யோசனை தோன்றும். உங்களுக்கு லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். கணவன் மனைவி உறவுக்குள் சகஜமான அணுகுமுறை கொள்வது நல்லது. மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை சுமாராக தான் இருக்கும்.

கன்னி.
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் பணியில் வெற்றி காண்பீர்கள். இதனால் மேலதிகாரிகள் உங்களுக்கு பதவி உயர்வு தந்து பாராட்டுவார்கள். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் உணர்வு காணப்படும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை ஊக்கத்தொகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் மகிழ்ச்சியடைவீர்கள்.
இன்று வேலை மற்றும் குடும்ப வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கப் போகிறார்கள். செய்யும் வேலை நற்பலனைத் தரும். நேர்மையாக செய்யும் வேலை உங்களுக்கு பலன் தரும்.

துலாம்.
இன்று நீங்கள் பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் விஷயங்களில் சிறப்பாக இருக்கும். உங்கள் செலவுகள் சற்று அதிகரிக்கும். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

விருச்சிகம்.
இன்று எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிட வேண்டும். இன்று மாலை வரை பல லாப வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசியலில் கட்சியில் இருப்பவர்கள் நல்லவர்களும் செல்வாக்கு மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். அதிக கடின உழைப்புடன் உழைப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை நிதிநிலைமை அவ்வளவு சிறப்பாக இருக்காது. தேவையற்ற கூடுதல் செலவினங்கள் காணப்படும்.

தனுசு.
இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அலுவலக சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணிக்காக பயணம் செல்ல வேண்டியது இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெறுவது நன்மை பயக்கும்.

மகரம்.
இன்று. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நம்பிக்கையும், திருமண வாழ்க்கையில் அன்பும் பாசமும் அதிகமாக இருக்கும். நாள் முழுவதும் உங்களுக்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியது இருக்கும்.
எதையும் சிந்தித்து செய்யவும். யாருடனும் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடாது. இதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், பணியிடத்தில் உங்கள் நிலை மேம்படும்.

கும்பம்.
இன்று மற்றவர்கள் மூலம் சில புதிய யோசனைகளைப் பெறலாம். உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

மீனம்.
இன்றைய நாள் உங்கள் முன்னேற்றத்திற்கு நாளாக இருக்கும். கவனமாக உங்கள் வேலையில் ஈடுபட்டால் வெற்றி உண்டாகும். வேலையில் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சியைத் தொடர்ந்தால், உங்கள் தடைபட்ட பணிகள் இன்று நிறைவேறும். செரிமானம் மற்றும் கண் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments