Sunday, May 5, 2024
Homeஇலங்கை செய்திகள்இனி போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை : இன்று முதல் அமுலாக்கப்பட்டது புதிய சட்டம்!

இனி போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை : இன்று முதல் அமுலாக்கப்பட்டது புதிய சட்டம்!

ஐந்து கிராமுக்கு மேல் போதைப்பொருளை வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.திருத்தப்பட்ட போதைப் பொருள்கள், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் இப்போது அமலுக்கு வந்துள்ளது,

இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக இன்று முதல் இச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி, விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான பொருள்கள் ஒளடதங்கள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று கையொப்பமிட்டுள்ளார்.

இதன்படி, காலத்தின் தேவைக்கேற்ப போதைப் பொருட்களை இறக்குமதி செய்தல், வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி இம்மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 103 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது 7,536 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments