Friday, May 3, 2024
Homeஇலங்கை செய்திகள்சஜித் பிரேமதாசவை கிண்டல் செய்த ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்!

சஜித் பிரேமதாசவை கிண்டல் செய்த ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இன்னும் பாடம் புகட்ட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலிஹத்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சிலர் எதிர்ப்புத் தெரிவித்தமை கவலையளிக்கிறது.

சம்பந்தப்பட்ட தரப்பினர் சஜித் பிரேமதாசவுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து கொழும்பில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இன்னும் பாடம் கற்க வேண்டியவர். ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவருடன் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய அவர் அரசியலையோ அல்லது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதையோ கற்றுக் கொள்ள முடியாவிட்டால், அவர் கற்றுக்கொள்ள இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்க்கட்சித் தலைவருடன் இணைக்க அமைச்சர் மஹிந்த அமரவீர முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தயாசிறி ஜயசேகரவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments