Thursday, May 2, 2024
Homeஇந்திய செய்திகள்நொடி பொழுதில் ரயில் விபத்தில் இருந்து தப்பிய  மக்னா யானை..!பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

நொடி பொழுதில் ரயில் விபத்தில் இருந்து தப்பிய  மக்னா யானை..!பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவையில் ரயில் வரும் நேரத்தில் தண்டாவளத்தை கடக்க முயன்ற மக்னா யானை நொடி பொழுதில் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. தொடர்ந்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி அந்த மக்னா யானை கும்கி யானை உதவியுடன் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு,6 ம் தேதி கோவை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. பின்னர் கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வந்தது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு சாலையை கடந்த யானை கடந்த 25 ம் தேதி காலை மதுக்கரை வனப்பகுதிக்கு வந்தது. தென்னை தோப்பு, ஓடை மற்றும் விளை நிலங்கள் வழியாக சென்ற மக்னா யானையை வனத்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு கொடுத்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த மக்னா யானை மதுக்கரை அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏறி கடக்க முயன்றது. அப்போது கேரளா செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்துள்ளது. இதனை கண்ட வனத்துறையினர் செய்வதறியாது யானையை சத்தம் எழுப்பி, பட்டாசுகள் வெடித்து விரட்ட முயற்சித்தனர். அப்போது யானை ரயில் வரும் நொடி பொழுதில் அந்த ட்ராக்கை கடந்து சென்றது.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  துரிதமாக செயல்பட்டு யானையின் உயிரை காப்பாற்றிய வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments