Saturday, May 18, 2024
Homeஇந்திய செய்திகள்அனைத்து சூழலிலும் நிதானத்துடன் செயல் படுபவர்..!புஜாராவின் தந்தை உருக்கமான பேச்சு…

அனைத்து சூழலிலும் நிதானத்துடன் செயல் படுபவர்..!புஜாராவின் தந்தை உருக்கமான பேச்சு…

இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விளங்குபவர் சேதேஷ்வர் புஜாரா. ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பின் அணியில் அவரது இடத்தை நிரப்ப வந்தவராக கருதப்படும் புஜாரா, தனது அபார தடுப்பாட்ட திறமையால், எதிரணியின் பந்துவீச்சாளர்களை கதி கலங்க வைக்கும் திறன்படைத்தவர். நிதானத்திற்கு பெயர் போன புஜாரா இந்திய அணிக்காக தனது 100ஆவது டெஸ்ட் போட்டியை அடுத்து விளையாடவுள்ளார்.

சச்சின், டிராவிட், லட்சுமண் போன்ற 12 ஜாம்பவான் வீரர்களே இதுவரை 100 அல்லது அதற்கு அதிகமான போட்டிகளை இவர்கள் விளையாடியுள்ளனர். இத்தகைய அபார மைல்கல்லை புஜாராவும் தற்போது படைக்கவுள்ளார். இந்நிலையில், தனது மகனின் இந்த மைல்கல் குறித்து தந்தை அரவிந்த் புஜாரா பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. புஜாராவுக்கு ஆரம்பகால பயிற்சியாளராக இருந்து தலைசிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்க அஸ்திராவம் போட்டவர் இவர் தான்.

தனது மகன் குறித்து பேசிய அரவிந்த், “எந்தவொரு விளையாட்டிலும் 100 போட்டிகள் விளையாடுவது என்பது சாமானிய விஷயம் அல்ல. இதை சாத்தியப்படுத்த ஒழுங்கு, உடல் நலம், டயட் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்த புஜாரா கொடுத்த கடின உழைப்பு தான் தற்போது பலனாக மாறியுள்ளது.

புஜாரா என்றவுடன் என் நினைவுக்கு வருவது அவன் மனோ திடம் தான். பள்ளி மாணவராக புஜாரா விளையாடிக்கொண்டிருந்த போது, போட்டித் தொடருக்கு நடுவே அவனது தாயார் மறைந்துவிட்டார். போட்டி முடித்து வீட்டிற்கு வந்த போது தான் அம்மா இறந்து போன விவரம் அவனுக்கு தெரியும். ஆனால், சோகத்தை உள்ளுக்குள்ளே அடக்கிகொண்ட புஜாரா, பொது வெளியில் அழவில்லை. யார் முன்னரும் அவன் கண்ணீர் விட்டதில்லை. அமைதியாக அனைத்தையும் உள்ளுக்குள் அடக்கிக்கொண்டான். எனது மனைவி மூலம் அவனுக்கு ஆன்மீக ஈடுபாடு இளம் வயதிலேயே வந்தது. அதுவே அவனது வாழ்வில் மன திடத்தை வடிவமைத்து என்று கூறலாம்.

உடல் வலிகளை மருந்து மாத்திரை மூலம் குணப்படுத்தி விடலாம். ஆனால், மனதின் துயரத்தை போக்குவது எளிதல்ல. மனோ திடத்தை அவன் ஆன்மீகத்தின் மூலம் பெற்றான். ஒருமுறை அவன் 13 வயதாக இருக்கும் போது வெளியூரில் விளையாட சென்றிருந்தான். பயணத்தின் போது அவனிடம் இருந்த செல்போன், பணம் ஆகியவற்றை யாரோ திருடி சென்றுவிட்டனர்.

ஆனால், அவன் பீதியடையாமல் அருகே இருந்தவரிடம் போன் வாங்கி தகவலை தெரிவித்தான். நான் உடனடியாக மும்பை விரைந்து அவனை சந்தித்தேன். பொருள்கள் தொலைந்து போனதால் அவன் பதற்றத்துடன் இருப்பான் என நினைத்தேன். ஆனால், நடந்ததை யதார்த்தமாக எடுத்து அதை பதற்றமின்றி கடந்து சென்றுவிட்டார்.இப்படி ஒரு மகனை யாரும் பார்க்க முடியாது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments