Friday, May 17, 2024
Homeஉலக செய்திகள்அமெரிக்காவில் தொடரும் பரபரப்பு - மற்றுமொரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அமெரிக்காவில் தொடரும் பரபரப்பு – மற்றுமொரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அடையாளம் தெரியாத மற்றொரு மர்ம பொருளை அமெரிக்கா தனது எல்லைக்கு மேல் சுட்டு வீழ்த்தியதுடன் இந்த மாதத்தில் இது நான்காவது சம்பவமாகும்.

இது ஞாயிற்றுக்கிழமை விமானப்படை மற்றும் தேசிய காவலர் விமானிகளால் வீழ்த்தப்பட்டது என்று மிச்சிகன் காங்கிரஸ் பெண்மணி எலிசா ஸ்லோட்கின் கூறினார்.

கனேடிய எல்லைக்கு அருகாமையில் உள்ள ஹூரான் ஏரிக்கு அருகில் குறித்த மர்ம பொருள் பறந்ததால் அதனை சுட்டு வீழ்த்துமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.

பெப்ரவரி 4 அன்று சீன உளவு பலூனை அமெரிக்க இராணுவம் அழித்ததில் இருந்து வோஷிங்டன் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. அந்த பலூன் தென் கரோலினா கடற்கரையில் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு அமெரிக்க கண்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

அதிகாரிகள் அதன் சில எச்சங்களை கடலில் இருந்து மீட்டனர் மற்றும் பலூன் சீனாவில் இருந்து வந்ததாகவும், கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இது உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதை மறுத்த சீனா, இது வானிலை கண்காணிப்பு சாதனம் என்றும், தவறாக வந்துவிட்டதாகவும் கூறியது.

அந்த ஆரம்ப சம்பவத்திலிருந்து, அமெரிக்க போர் விமானங்கள் இன்னும் மூன்று உயரமான மர்ம பொருட்களை பல நாட்களில் சுட்டு வீழ்த்தியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments