Friday, May 17, 2024
Homeஉலக செய்திகள்அறுபது ஆண்டுகளாகியும் நித்திரை இன்றி வாழும் முதியவர்!!

அறுபது ஆண்டுகளாகியும் நித்திரை இன்றி வாழும் முதியவர்!!

வியட்நாமை சேர்ந்த முதியவர் ஒருவர் பல ஆண்டுகளாக தூங்காமலே வாழ்ந்து வரும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வியட்நாம் நாட்டை சேர்ந்த 80 வயது முதியவர் தாய் நகோக். இவர் 1962ல் தனது 20வது வயதில் வித்தியாசமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்த அவருக்கு தூக்கம் வராமலே இருந்துள்ளது.

இதுகுறித்து பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்தபோதும் அவருக்கு தூக்கம் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த 60 ஆண்டுகளாக தூங்காமலே வாழ்ந்து வருகிறார்.

பொதுவாக தூங்காமல் இருந்தால் பலவித உடல்நல கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுவதுண்டு.

ஆனால் இந்த அதிசய தாத்தாவோ தூக்கம் இல்லாவிட்டாலும் உடல்நல குறைகள் இன்றி மகிழ்ச்சியாக 80 ஆண்டுகளாக வாழ்ந்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments