Friday, May 17, 2024
Homeஉலக செய்திகள்"ஆக்சிஜன் பற்றாக்குறை "கை விரித்த சீன மருத்துவர்கள் … சீனாவை மிரள வைக்கும் கொரோ.

“ஆக்சிஜன் பற்றாக்குறை “கை விரித்த சீன மருத்துவர்கள் … சீனாவை மிரள வைக்கும் கொரோ.

பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளதாகவும் அங்கு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் கூட இல்லாத சூழல் நிலவுவதாகக் கூறுகின்றனர்.

சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. அங்குப் பரவும் ஓமிக்ரான் பிஎப்.7 வகை நாடு முழுக்க மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது.பேய்ஜிங் மருத்துவமனைகள் வயதான கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.. சீனா தனது கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கைவிட்ட சில வாரங்களில் நிலைமை கையை மீறிச் செல்ல தொடங்கியுள்ளது.
சீனா
அங்குள்ள எமர்ஜென்சி ரூம்களில் படுக்கைகளே இல்லை.. நோயாளிகள் ஆம்புலன்ஸ்களுக்காக மணிநேரம் காத்திருக்கிறார்கள்.. தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து மருத்துவர்களே சோர்வடைந்துவிட்டனர். அங்கு நிலைமை அந்தளவுக்கு மோசமாக உள்ளது. பொதுவாகச் சீன தலைநகர் பெய்ஜிங் கொரோனாவை எதிர்கொள்வதில் சிறந்து விளங்கும். மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது, பெய்ஜிங் மிகச் சிறப்பான ஒரு சுகாதார கட்டமைப்பைக் கொண்டிருந்து. ஆனால், அங்கும் நிலைமை கட்டுக்குள் இல்லை.
முக்கிய காரணம்
அங்குக் கடந்த 3 ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை திடீரென நீக்கியதே இதற்கு முக்கிய காரணமாகும். மூன்று ஆண்டுகள் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால், ஒருவருக்கு கொரோனா வந்தால், லாக்டவுன் போட்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும். ஆனால், மக்கள் எதிர்ப்பு இதற்கு அதிகரிக்கவே கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு முழுமையாக விலக்கிக் கொண்டது. இதனால் கொரோனா வேகமாகப் பரவ தொடங்கிவிட்டது. மேலும், அங்குப் பெரும்பாலானோருக்கு தடுப்பாற்றலும் இல்லை என்பதால் வைரஸ் பாதிப்பு படுவேகமாக பரவுகிறது.
மருத்துவர்களுக்கும் கொரோனா
பெய்ஜிங்கில் உள்ள நிலை குறித்து அங்குள்ள மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘இங்கு மருத்துவர்கள் எல்லாம் சோர்வடைந்துவிட்டனர். எங்களால் வேறு மருத்துவமனைகளுக்கும் நோயாளிகளை அனுப்ப முடியாது. ஏனென்றால், எல்லா இடங்களிலும் அதிகப்படியான நோயாளிகள் உள்ளன. எமர்ஜன்சி அறையில் அத்தனை கூட்டம் இருக்கிறது. கூட்டம் அளவுகடந்து இருப்பதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களும் கூட பிபிஇ உடை அணிந்து கொண்டு சிகிச்சை அளித்தே வருகின்றனர்’ என்றார்.
ஆம்புலன்ஸ்கள்
எமர்ஜன்சி ரூம்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஆம்புலன்ஸ்களில் அழைத்து வரப்படும் நோயாளிகளை எங்கு வைப்பது என்றே தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஆம்புலன்ஸ்களிலேயே சில மணி நேரம் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ்கள் இப்படி ஒரே இடத்தில் நின்றுவிடுவதால், மற்ற நோயாளிகளுக்கும் உரிய நேரத்தில் உதவி கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரம் வரை ஆம்புலன்ஸ்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக பெய்ஜிங் மக்கள் புலம்புகின்றனர்.
ஆக்சிஜன் கூட இல்லை
இது தொடர்பாக மற்றொரு மருத்துவர் கூறுகையில், ‘எங்களிடம் இப்போது படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் கூட சில இடங்களில் இல்லை. மருத்துவமனைகள் முழுக்க நோயாளிகளால் நிரம்பியுள்ளன. மருத்துவமனைகளில் உள்ள அனைத்து ரூம்களிலும் நோயாளிகளைத் தங்க வைத்து சிகிச்சை தந்து வருகிறோம், அப்படியிருந்தாலும் கூட படுக்கைகள் போதவில்லை’ என்று அவர் தெரிவித்தார். தலைநகர் பெய்ஜிங் மட்டுமின்றி கிட்டதட்ட அனைத்து சீன மருத்துவமனைகளிலும் இதே சூழல் தான் நிலவுகிறது.
அதிகாரப்பூர்வ தகவல்
உண்மை நிலை இப்படியிருக்க, சீன அரசு தனது நாட்டில் கொரோனா பரவல் பெரிதாக இல்லை என்ற பிம்பத்தையே தொடர முயல்கிறது. இதனால் நேற்று வரை சீனா தனது அதிகாரப்பூர்வ கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளைத் தொடர்ந்து குறைந்தே காட்டி வந்தது. இதற்கு சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரிக்கவே, கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தினசரி டேட்டாவை வெளியிடுவதையே சீனா நிறுத்துக் கொண்டது.
ஓமிக்ரான்
இது தொடர்பாக ஹாங்காங் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‘புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் வேரியண்ட் இப்போது வேகமாகப் பரவுகிறது. இதுவரை நாம் பாரத்தைக் காட்டிலும் இந்த வகை வேகமாகப் பரவுகிறது. வரும் நாட்களில் சீனாவில் வைரஸ் பாதிப்பு மேலும் மோசமாக இருக்கும் என்றே நினைக்கிறோம்.. இத்தனை காலம் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட்டதே நிலைமை கையை மீறிச் செல்ல காரணமாக அமைந்தது’ என்று அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments