Sunday, May 5, 2024
Homeஇந்திய செய்திகள்ஆசியாவிலேயே மிகவும் பழமையான பெண்கள் பள்ளி இதுதான் ..!பழமை மாறாமல் மீண்டும் காட்டும் பணி தொடங்கியது...

ஆசியாவிலேயே மிகவும் பழமையான பெண்கள் பள்ளி இதுதான் ..!பழமை மாறாமல் மீண்டும் காட்டும் பணி தொடங்கியது ..

புதுச்சேரியில் பொழிவுறு நகரத்திட்டத்தின் கீழ் பல்வேறு புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் புராதன கட்டிடங்களை பாதுகாக்கவும், அதை புணரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பொழிவுறு நகரத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என வர்ணிக்கப்பட்ட புதுச்சேரியில் பிரெஞ்சுகாரர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கட்டிடங்கள் உள்ளன.

அதில் 1827ம் ஆண்டு புதுச்சேரி கடற்கரையோரம் உள்ள தூமாஸ் தெருவில் கட்டப்பட்ட பிரெஞ்சு பெண்கள் பள்ளியாகும். இது ஆசியாவிலேயே பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் பள்ளி என அறியப்படுகிறது.  பிரெஞ்சு ஆட்சி வெளியேறியவுடன் இதை புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை ஏற்று அரசு பெண்கள் பள்ளியாகவே நடத்தி வந்தது. கட்டிடத்தின் உறுதித்தன்மையை இழந்ததால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டு இங்கு பயின்ற மாணவிகள் வேறு அரசுப்பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

இந்த கட்டிடத்தை உணவகமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதை பழமை மாறாமல் அதே பெருமையுடம் பெண்கள் பள்ளி அமைக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு பொழிவுறு நகர மேம்பாட்டு திட்டத்தின்படி 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு பள்ளியை ரூ.8.22 கோடி செலவில் பாரம்பரிய மிக்க கல்வி நிறுவனமான விடுதியுடன் கூடிய இளம் பெண்கள் பள்ளியால மறு சீரமைப்பு செய்வதற்கு முடிவு செய்து அதற்காக பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லெட்சுமி நாராயணன் உள்ளிட்ட கல்விதுறை அதிகாரிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர். 2 ஆண்டுக்குள் பிரெஞ்சு மற்றும் மேற்கத்திய கட்டிடக்கலையில் இந்த பள்ளி கட்டப்படவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments