Friday, May 17, 2024
Homeஇலங்கை செய்திகள்இந்தியாவை அடுத்து சீனாவும் பச்சைக் கொடி!. இலங்கைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! - IMFஇற்கு பறந்த தகவல்.

இந்தியாவை அடுத்து சீனாவும் பச்சைக் கொடி!. இலங்கைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! – IMFஇற்கு பறந்த தகவல்.

இலங்கையின் கடன் தொடர்பான பத்திரங்களுக்கு உத்தரவாதம் அளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து மீள உதவும் வகையில் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா வழங்கியுள்ளது.

சில நாட்களாக இந்தியா உறுதி அளித்திருந்த நிலையில் இன்று சீனாவின் உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தினால் பிணை வழங்குவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் நீண்டகால கோரிக்கைக்கு சீனா நேற்று பதிலளித்துள்ளது.

சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM Bank) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிதியமைச்சர் என்ற வகையில் எழுதியுள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடுகளான பொருளாதார ரீதியில் பலம் வாய்ந்த இரண்டு நாடுகளின் ஆதரவினால் இலங்கைக்கு விரைவில் கடன் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments