Friday, May 3, 2024
Homeஇலங்கை செய்திகள்இந்திய இழுவை மடி படகுகளால் இலங்கை கடற்றொழிலாளர்களின் 20 வலைகள் நாசம்.

இந்திய இழுவை மடி படகுகளால் இலங்கை கடற்றொழிலாளர்களின் 20 வலைகள் நாசம்.

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இந்திய இழுவை மடி படகுகளால் இரண்டு கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான 20 வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன.

நேற்று (18.02.2023) இரவு 9.00 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்நுழைந்த இந்திய இழுவை மடி படகுகள் குறித்த கடற்றொழிலாளர்களின் வலைகளை அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்திய இழுவை மடி படகுகளால் இலங்கை கடற்றொழிலாளர்களின் 20 வலைகள் நாசம் | Destroy Fight Illegal Indian Fishermen Trawlers

கடற்படை அருகில் இருந்தும் நாளாந்தம் அத்துமீறி தமது வாழ்வாதாரத்தை அழித்துச்
செல்லும் இந்திய இழுவைமடி படகுகளை ஏன் இவர்களால் கைது செய்ய முடியவில்லை என்றும் இவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்?

இந்திய இழுவைமடி படகுகளால் அறுத்துச் செல்லப்பட்ட வலைகள் சுமார் 5 இலட்சம் ரூபாவிற்க்கும்
அதிகம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததுடன் தமக்கு நட்ட ஈட்டை பெற்றுத்தருமாறும்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய இழுவை மடி படகுகளால் இலங்கை கடற்றொழிலாளர்களின் 20 வலைகள் நாசம் | Destroy Fight Illegal Indian Fishermen Trawlers

எங்களுடைய வாழ்க்கையை அழித்தொழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தாவிடில் தற்கொலை செய்யும் நிலைக்கு தாம் தள்ளப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடற்றொழில் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்படை மற்றும் நீரியல்வளத் திணைக்களம் தயக்கம் காட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments