Friday, May 3, 2024
Homeஉலக செய்திகள்இந்த ஆண்டுக்குள் ரஷ்யாவை தோற்கடிப்போம் - சூளுரைத்த ஜெலென்ஸ்கி.

இந்த ஆண்டுக்குள் ரஷ்யாவை தோற்கடிப்போம் – சூளுரைத்த ஜெலென்ஸ்கி.

இந்த ஆண்டுக்குள் தங்கள் மீது படையெடுத்து வந்திருக்கும் ரஷ்யாவை தோற்கடிக்கப் போவதாக
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நம் மீது ரஷ்யா படையெடுத்து ஓர் ஆண்டு ஆகியும் நாம் தளராமல் உறுதியுடன் நிற்கிறோம்.
நம்மை ரஷ்யாவால் தோற்கடிக்கவே முடியவில்லை. நம்மை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் ரஷ்யாவை இந்த ஆண்டுக்குள் தோற்கடிப்போம்.
அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

ரஷ்யா ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தங்களது படையினர் எதிர்த் தாக்குதலை
தீவிரப்படுத்தவிருப்பதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”இனி ரஷ்யாப் படையினர் மீதான பதிலடி
தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும். அதற்காக நாங்கள் கடுமையாக தயாராகி வருகிறோம்’ என்றார்.

சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து
நிறுத்துவதற்காக 1949-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேட்டோ அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் தன்னை விரிவாக்கம் செய்து வந்தது.

அவ்வாறு நேட்டோ அமைப்பு தங்களை நாலாபுறமும் சுற்றிவளைப்பதற்கு ரஷ்யா நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், நோட்டோவில் இணைவதற்கு அதிபர் வொலோதிமீர் ஸெலென்க்ஸியின்
தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது. இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் படையினரிடம் இருந்த கிழக்குப் பகுதி மக்களைப் பாதுகாக்கவும்,
உக்ரைன் இராணுவம் மற்றும் அரசில் இருந்து நாஜி ஆதரவு சக்திகளை அகற்றவும் அந்த நாட்டில் சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாக ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24-ஆம் திகதி அறிவித்தார்.

உக்ரைன் போரின் முதல் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, ஐரோப்பா முழுவதும் போருக்கு
எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில், போரில் குண்டு வைத்த தகர்க்கப்பட்ட ரஷ்யா பீரங்கியொன்றை
ரஷ்யா தூதரகத்துக்கு முன் வைத்து போர் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள புகழ் பெற்ற ஈஃபில் கோபுரம், உக்ரைன் கொடியின்
மஞ்சள் மற்றும் நீல நிறங்களால் அலங்கரிக்கப்பட்டது.
பிரிட்டனில் உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தலைநகர் லண்டனில் உள்ள உக்ரைன் தேவாலயத்தில் அரசியல்வாதிகளும் ,
தூதரக அதிகாரிகளும் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட சக்திவாய்ந்த லெப்பர்ட்-2 பீரங்கி, உக்ரைனிடம் முதல்முறையாக ஒப்படைக்கப்பட்டது.

அந்த பீரங்கியை வாங்கியிருந்த போலந்து, அதனை உக்ரைனுக்கு அளித்துள்ளது. உக்ரைன் போர் ஆண்டு தினத்தையொட்டி உக்ரைன் வந்திருந்த போலந்து பிரதமர் மடேயுஸ் மொராவீக்கி இது குறித்து கூறுகையில்,

‘லெப்பர்ட் பீரங்கியை உக்ரைனுக்கு அளித்துள்ளதன் மூலம், அந்த நாட்டுக்கான ஆதரவை
நாங்கள் உரக்கச் சொல்லியுள்ளோம்.’ என்றுள்ளது.

ரஷ்யா ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் பகுதிகளை மீட்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு இராணுவ உதவிகளை அளித்து வருகின்றன.

அத்தகைய உதவிகள் மூலம் அந்த நாடுகள் போரில் நேரடியாக ஈடுபடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டி
வரும் நிலையிலும்,
தங்களது சக்திவாய்ந்த லெப்பர்ட்-2 ரகத்தைச் சேர்ந்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தின.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments