Friday, May 3, 2024
Homeஆன்மீகம்இன்றைய ராசி பலன் - 24,02,2023.

இன்றைய ராசி பலன் – 24,02,2023.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று குழப்பமான நாளாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறல் ஏற்படலாம். இன்று உங்கள் படிப்பில் ஆர்வம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். உணவு விஷயங்களில் கவனம். அலுவலகத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உங்கள் செலவுகளும் அதிகமாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இன்று எந்த வித விவாதத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இன்று அதிகமாக வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீட்டிலேயே இருந்து மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. ஆபத்தான எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். முதலீட்டை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு நாள் சாதகமானதாக இருக்காது. அதனால் எதிலும் நிதானமாக நடந்து கொள்ளவும்.

மிதுனம்:
மிதுன ராசிக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட நல்ல வாய்ப்புகளை இருக்கும். உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்களும் இன்று படிப்பதிலும் எழுதுவதிலும் முழு ஆர்வம் காட்டுவார்கள். உங்கள் பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். குறுகிய தூரப் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம்.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இன்று எதையாவது நினைத்து குழப்பத்தில் இருப்பார்கள். இன்று, பழைய விஷயங்களை நினைவு கூர்வது உங்கள் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்தலாம். உங்களின் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவீர்கள்.
மூத்தவர்களின் ஆசிகள் உங்கள் மீது இருக்கும். பெண் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் அதிர்ஷ்டமும் உங்கள் கடின உழைப்பும் கைகொடுக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்று முழு நேர்மையுடன் கடுமையாக உழைத்தால் அதற்கான முழு பலனும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் திருமணமானவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் மாலை நேர நடைப்பயணத்தையும் திட்டமிடலாம். ஒருவருடன் வாக்குவாதம் உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும், எனவே இந்த நாளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஈடுபாடு காட்டுவார்கள். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பயணத்திற்கான வாய்ப்புகளும் உண்டு. இன்று நீங்கள் எதிர்பார்த்த சில முக்கியமான தகவல்களையும் பெறலாம். நிலம் தொடர்பான ஆவணங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பணித் துறையில் நிறைய அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.

துலாம்:
துலா ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்னைகள் தீரும். உங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். ஏதேனும் நிதி பிரச்சனையை எதிர்கொண்டால் அது இன்று முடிவுக்கு வரும். இன்று மாலை உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். விசேஷமான நபருடன் சந்திப்பு ஏற்பட்டு வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று குடும்ப வாழ்க்கையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள். அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவதுடன், நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால், உங்களுக்கு மரியாதை கிடைக்கும். புதிய நண்பர்களை உருவாக்குவார்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அரசியல் தொடர்பு உள்ளவர்கள் நன்மை அடைவீர்கள். அனுபவம் வாய்ந்த ஒருவரால் ஆதாயமடைவீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். மாணவர்களும் இன்று படிப்பில் முழு கவனம் செலுத்துவார்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை சந்திப்பீர்கள். உடல் நலனில் அக்கறை வேண்டும். உணவு விஷயத்தில் கவனமாக தேவை.

மகரம்:
மகர ராசியினர் மூத்தவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். நாளின் தொடக்கத்தில் ஒருவருடன் சிறு சிறு சண்டைகள் வரலாம். நல்ல சிந்தனையுடன் செயல்படவும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் நம்பிக்கை ஏற்படும். நீங்கள் கடினமாக உழைத்து உங்கள் உங்கள் தரத்தை மேம்படுத்தி, லாபம் அடைவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்று வேலையில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். நிதானமாக செயல்பட்டால் நல்ல லாபம் அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சொத்துகள் வகையில் ஆதாயம் அடைவீர்கள். கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தின் சக ஊழியர்கள் உங்கள் பணியில் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள்.

மீனம்:
மீன ராசிக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் பயணம் மற்றும் பொழுதுபோக்கின் மூலம் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள், சக ஊழியர்கள் உங்கள் வேலையில் நிறைய உதவுவார்கள். தொழில் முதலீடு தொடர்பாகவும், பணிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும். சில புதிய நபர்களின் உதவியுடன், நீங்கள் புதிய வேலையைத் தொடங்கலாம், அது உங்களுக்கு நன்மை பயக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments