Friday, May 3, 2024
Homeஆன்மீகம்இன்றைய ராசி பலன் - 25,02,2023

இன்றைய ராசி பலன் – 25,02,2023

மேஷம்:
இன்று மேஷ ராசிக்கு எண்ணங்களில் மாற்றம் ஏற்படலாம். நீங்கள் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய சூழல் இருக்கும். ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் அனுதாபம், அன்பு, தொண்டு போன்ற உணர்வுகள் எழும். ஆன்மிக ரீதியாகவும் மிகவும் திருப்தி அடைவீர்கள். மொத்தத்தில் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், செல்வத்தைக் குவிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் குடும்பத்தினருடன் சில இனிமையான தருணங்களை செலவிடுவீர்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரியளவில் சாதகமான பலன் கிடைக்காமல் போகலாம். தொல்லை தரும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வது நல்லது, இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் சுயநலத்துடன் சிந்திப்பீர்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வேலையில் மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது. இன்று உங்கள் வேலையில் ஒருவித மாற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் வார்த்தைகள் மக்களின் இதயங்களை வெல்லும். மக்கள் மத்தியில் உங்களுக்கான இடத்தையும் கௌரவத்தையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மாணவர்களுக்கு அதிக உழைப்பு தேவைப்படும்.

கடகம்:
கடக ராசியினர் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செய்யவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும்.
குடும்பத்திலும், நண்பர்களிடமு ம் வாக்குவாதங்களைத் தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது.
தெய்வ பக்தி அதிகரிக்கும். புனிதயாத்திரையும் செல்வதில் ஆர்வம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். இளைஞர்கள் வேலையில் போராடி வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் பணியிடத்தில் சில பிரச்சனைகள் சமாளிக்க வேண்டியது இருக்கும். எனவே உங்கள் பணியிடத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் புத்திசாலித்தனமாகச் செயல்படவும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாழ்க்கைத்துணையுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் குழந்தைகளால் மகிழ்ச்சியை பெறலாம். தற்போதைக்கு உங்கள் வேலையை மேம்படுத்த முயல்வீர்கள். அறிவு, அனுபவமுள்ள நண்பரின் ஆலோசனையுடன், உங்களின் கிடப்பில் கிடக்கும் வேலையை முடிப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

துலாம்:
துலா ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இருந்தாலும் வேலையில் வரும் பிரச்சனைகளை எளிதில் தீர்த்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் பழைய நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.
வாழ்க்கை துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். புத்தாடைகள் வாங்கும் நிலை உருவாகும்.
தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மற்றும் பார்ட்னர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தை முன்னேற்றுவீர்கள். வீட்டு வேலைகளில் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கலாம். உங்கள் வணிகத்தில் அனுசரித்துச் செல்லவும்.
உடல் நலம் மேம்படும். நிதிநிலை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும்.
நிதி உதவி எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இன்று மற்றவர்களின் ஆதரவும், கடவுளின் அருளும் கிடைக்கும். அதனால் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வேலையை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே கையாள முயற்சி செய்யுங்கள். குடும்ப வேலையை பொறுப்புடன் நிறைவேற்றுங்கள். உங்கள் மனம் அமைதியால் நிறைந்திருக்கும்.
வெளியூர் பயணங்களின் போது தடைகள் உண்டாகலாம் என்பதால் கவனம் தேவை. பொருள் இழப்பு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இன்று யாருடனும் மோதல் போக்குடன் செயல்பட வேண்டாம். இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்றிடலாம். உங்கள் தடைப்பட்ட பணிகளை எளிதாக முடிக்க முடியும். மற்றவர்களிடம் சிக்கிய பணத்தையும் திரும்பப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகமாக இருக்கும். மாணவர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைப் பெறுவார்கள்.
பயணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்று பணியிடத்தில் அமைதியாக வேலை செய்து முடிப்பது நல்லது. இன்று நீங்கள் எவ்வளவு அமைதியாக வேலை செய்கிறீர்களோ, அந்த நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் மேன்மை உண்டாகும்.
சகோதரர் வழியில் இருந்த மன வருத்தங்கள் நீங்குவதுடன் அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியாகவும் சுகபோகமாகவும் வாழக்கூடிய நாளாகும். இந்த நாளில், உங்கள் எண்ணப்படி அனைத்து வேலைகளும் நடைபெறும். அதன் காரணமாக நீங்கள் நன்மை அடைவீர்கள். இன்று பண வரவு கிடைக்கும். இன்று வேடிக்கையாகவும், உல்லாசமாக நாள் நகரும். குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.
இன்று பேச்சில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
உத்திரட்டாதி: எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நன்மை தரும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments