Friday, May 3, 2024
Homeஆன்மீகம்இன்றைய ராசி பலன் - 27,02,2023

இன்றைய ராசி பலன் – 27,02,2023

மேஷம்:
வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மங்களகரமானதாக இருக்கும். வீட்டு பராமரிப்புக்காகப் பணம் அதிகம் செலவிட நேரிடும். உங்கள் காதல் வாழ்க்கையில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் வியாபாரத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து திருப்தியான நிலை காணப்படும். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

ரிஷபம்:
உங்கள் மனதிற்கு அமைதியைத் தரும் நாள். உங்கள் பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும். நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள். உங்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.
உத்தியோக ரீதியிலான பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். அதனால் நல்ல பலன்களும் உண்டாகும்.
தொழில் வியாபாரம் சிறப்படைய புதிய கருவிகள் வாங்கும் முயற்சி நல்ல பலனை தரும்.

மிதுனம்:
இன்று உங்கள் பணியிடத்தில் சரியான திட்டமிட்டு செயல்படவும். மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். பெரிய பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையேல் நஷ்டத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்.
கவலைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படக்கூடும். முக்கிய விஷயங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

கடகம்:
இன்று தடைப்பட்ட உங்களின் பணிகள் இன்று முடிவடையும் தருணம் வந்துவிட்டதால் உங்களின் முக்கியப் பணிகளை செய்து முடிக்க ஆர்வம் காட்டுங்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இன்று உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் உங்கள் நண்பர்களின் ஆதரவையும் பெறுவீர்கள், அலுவலகத்தில் சூழல் சாதகமாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்கள் அறிமுகம் அவர்களால் நன்மை உண்டாகும்.

சிம்மம்:
சிம்ம ராசியினர் மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய நாள். ஆன்மிக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று பேச்சைக் கட்டுப்படுத்தி செயலில் கவனம் செலுத்த வேண்டும். காதல் வாழ்க்கையில் ஒரு இனிமையான உணர்வு இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்க கூடும். நண்பர்கள் உதவக்கூடும்.
திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி:
இன்று சண்டை சச்சரவுகள் இருக்காது. செயல்களில் சிறப்பு கவனம் செலுத்தவும். நீங்கள் பணியிடத்தில் அதிக அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் நிதி நிலைமையை பலப்படும். உங்கள் உடல்நிலையில் எச்சரிக்கையாக இருங்கள்.
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வரக்கூடும். வியாபார ரீதியான பயணங்களால் லாபம் உண்டாகும்.
செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அடுத்தவரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

துலாம்:
துலா ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள். வீடு, நிலம் தொடர்பான விஷயங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் மேன்மை உண்டாகும். ஆசிரியர்களின் ஆசியைப் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலை பாராட்டும் விதத்தில் இருக்கும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
தொழில், வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு உங்கள் பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பச் சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இருக்கும். உங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் சில புதுமைகளைக் கொண்டுவர முடியும். நிதி நிலையை பலப்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். புதிய வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு அந்த யோகம் உண்டாகும்.

தனுசு:
இன்று சற்று ரிஸ்க் எடுக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் செயல்கள் வெற்றி பெற்று பெரிய லாபம் கிடைக்கும். மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் பெற்றோருடனான உறவு சுமுகமாக இருக்கும், நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். எந்த வகையான முதலீடுகளையும் தவிர்க்கவும்.
வருமானம் அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்
திட்டமிட்ட படி பணிகளை செய்து முடிப்பீர்கள். வீடு, சொத்து வாங்குவது விற்பதில் இருந்த தடை, தாமதம் நீங்கும்.

மகரம்:
மகர ராசிக்கு இன்று கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். இன்று உங்கள் குழந்தையின் எதிர்காலம் தொடர்பாக நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்கலாம். பல வகையான வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அரசியலில் தொடர்புடையவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருந்த மறைமுக போட்டிகள், எதிர்ப்புகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகளும் கிடைக்க கூடும்.
வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் தேவை பூர்த்தியாகும்.

கும்பம்:
உங்கள் தொழிலில் சில பிரச்சனைகள் இருந்து வந்தாலும் அவற்றை சிறப்பாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும், மனதில் மகிழ்ச்சி அலை வீசும். வியாபார ரீதியாக இன்றைய நாள் இனிமையாக இருக்கும். அவசர அவசரமாக எந்த ஒரு வேலையும் செய்யாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகம் உண்டாகும்.
​ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
சதயம்: குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்பட்டு அதனால் மன வருத்தங்கள் உண்டாகலாம் என்பதால் கவனமாக பேசுவது நல்லது.

மீனம்:
இன்று நீங்கள் வியாபாரத்தில் எடுக்கும் ரிஸ்க் சாதகமான பலன் கிடைக்கும். இன்று உத்தியோகம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று தொழில் சம்பந்தமான பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகள் தொடர்பான சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி கிடைக்கும்.
பயணங்களின் போது கூடுதல் கவனம் நன்மை தரும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம்.
உத்திரட்டாதி: எடுத்த காரியத்தை செய்துமுடிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். உறக்கம் பாதிக்கும் விதத்தில் பணிசுமை இருக்க கூடும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments