Tuesday, May 7, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் 2030 வரை இவர்தான் ஜனாதிபதி!

இலங்கையில் 2030 வரை இவர்தான் ஜனாதிபதி!

இலங்கையின் ஜனாதிபதியாக எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே (Ranil Wickremesinghe) பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

இந்நிலையில், சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Ranga Bandara) தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரணில் விக்கிரமசிங்கவே எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகிப்பார். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்று உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரையில் வெற்றி பெற்றதில்லை.

அதே போன்று எந்தவொரு அரசியல் தலைவரும் வெற்றியடைந்ததில்லை. ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் பேசுவது பிரயோசனமற்றது

ஏனைய கட்சிகளுக்கும் அதே நிலைமையே ஏற்படும். நாட்டில் பல்வேறு பௌத்த மகா சங்கங்கள் காணப்படுகின்ற போதிலும், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் தொடர்பிலேயே அனைவரும் பேசுகின்றர்.

அதே போன்று தான் இலங்கையிலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை மாத்திரமே ஸ்திரமான கட்சிகளாகவுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தனித்துச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க முடியும். எவ்வித பேதங்களும் இன்றி அனைவரையும் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இன, மத, மொழி பேதமின்றி அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் (Gotabaya Rajapaksa) இந்நாட்டின் பிரஜையாவார். அவரது திறமையற்ற நிர்வாகம் மற்றும் பலவீனத்தின் காரணமாகவே நாடு இந்த நிலைமையை அடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் அவருக்கு இங்கு வசிப்பதற்கான உரிமை காணப்படுகிறது.

அதற்கமைய நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது. அரசியலமைப்பிற்கமைய பிரஜைகள் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரச தலைவர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

அது கோட்டாபய ராஜபக்ஷவாகவும் இருக்கலாம். மஹிந்த ராஜபக்ஷவாகவும் இருக்கலாம். வேறு பிரஜைகளாகவும் இருக்கலாம் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments