Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட மொபைல் அப் ! பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கம்...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட மொபைல் அப் ! பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கம் என தெரிவிப்பு !

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற சுற்றுலா மற்றும் காணி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் பெர்னாண்டோ விளக்கமளித்தார்.

2023ஆம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments