Tuesday, May 7, 2024
Homeஇலங்கை செய்திகள்எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்.

இலங்கையில் அடுத்த வரும் வாரங்களில் எரிபொருள் விலை குறையும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருவதால் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களுக்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும்
விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் காணப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம், தொழிலாளர்களின்
பணம் அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை அதிகரிப்பு என்பனவே ரூபாயின் பெறுமதி அதிகரிப்பிற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments