Saturday, April 27, 2024
Homeஉலக செய்திகள்கணவரை மகிழ்விக்க திருமணமாகாத 3 இளம் பெண்கள் தேவை என சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்த...

கணவரை மகிழ்விக்க திருமணமாகாத 3 இளம் பெண்கள் தேவை என சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்த மனைவி!

தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரை கவனித்து கொள்ளவும், அவரை திருப்திபடுத்தவும், திருமணமாகாத 3 இளம் பெண்கள் தேவை என சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

தனது கணவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க “அழகான மற்றும் படித்த” பெண்கள் தேவையென குறிப்பிட்டுள்ளார்.

பாங்கொங்கை சேர்ந்த 44 வயதான பத்தீமா சம்னன் என்பவரே இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.

தனது கணவருடன் ஒன்றாக படுக்கையை பகிர முடியவில்லையென்றும், அது தன்னை ஒரு மோசமான மனைவியாக உணர வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

”இந்த பணியில் இணையும் பெண்களிற்கு தலா 15,000 பாட் (தாய்லாந்து நாணயம்) சம்பளம் கிடைக்கும், இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு கிடைக்கும். ஆனால் நீங்கள் எனக்கு உதவ வேண்டும். எனது அலுவலகத்தில் ஆவணப் பணிகளுக்கு உதவியாக இருவர் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் ஒருவர் நான், என் கணவர் மற்றும் என் குழந்தையை கவனித்துக் கொள்ள பணியமர்த்தப்படுவார்.

உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் வராது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

எனது கணவர் தனியாக கடினமாக உழைத்து வருகிறார், அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த பணியாளர்கள் மூலம் எனக்கும் வீட்டில் நண்பர்கள் இருப்பார்கள்” என்று சாம்னன் தெரிவித்துள்ளார்.

கணவரை மகிழ்விக்க பணிக்கு வரும் பெண்களிற்கான நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளார்.

“அவர்களுக்கு குழந்தை பிறக்கக் கூடாது, அது சுமையாகிவிடும். அவர்கள் அழகாக, இளமையாக தோற்றமளிக்க வேண்டும். நன்றாகப் பேச வேண்டும்,” என்று அவர் கூறினார்.

” பணிக்கு வரும் பெண்கள் என் கணவரை மகிழ்விப்பது முக்கியம்” என்று அந்தப் பெண் மேலும் கூறினார்.

அவர் நாள்பட்ட மன அழுத்தத்துடன் போராடி வருவதாகவும், அதனால் தான் உதவி தேவைப்படுவதாகவும் சம்னன் கூறினார்.

“நான் உடல் ரீதியாக சிரமப்படுவதால் என் கணவருக்கு பெண் துணைகளை கண்டுபிடிக்க விரும்புகிறேன். எனக்கு தீராத மனச்சோர்வு உள்ளது. எனது கணவரை என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை என்று உணர்கிறேன். நான் என் கணவருடன் படுக்கையை பகிரவில்லை. நான் ஒரு நல்ல மனைவி இல்லை என உணர வைக்கிறது” என்று அவர் விளக்கினார்.

இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவி வருவதைக் கண்டு அவரது கணவர் பட்டகோர்ன் ஆச்சரியமடைந்தார். ஆனால் அவர் அதை எதிர்க்கவில்லை. மூன்று லட்டு கிடைப்பதை ஏன் குழப்ப வேண்டுமென நினைத்து கப்சிப் ஆக இருந்து விட்டார்.

“என்னை கவனித்துக் கொள்ள யாரையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள். அப்படி வரும் பெண்களும் எங்கள் குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவார்கள், மேலும் எங்கள் நிறுவனத்தில் குடும்பத்தைப் போலவே வேலை செய்வார்கள்” என்று கணவர் கூறினார்.

“என்னைப் போல் இருக்க விரும்பும் மற்ற ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் இது பற்றித் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் மனைவிகளிடம் அனுமதி கேட்க வேண்டும், அதனால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் இருக்காது.” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரத்தை தொடர்ந்து, 33 வயதான பெண்ணொருவரை அந்த தம்பதி பணிக்கு அமர்த்தியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் பெண் சம்னனின் “நெருங்கிய தோழி” என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments