Friday, May 3, 2024
Homeஇந்திய செய்திகள்கண்களுக்கு, செவிக்கும் விருந்தும் படைக்கும் புல் புல் பறவை..

கண்களுக்கு, செவிக்கும் விருந்தும் படைக்கும் புல் புல் பறவை..

கொன்டைக்குருவி (bulbul) பைக்னோனோடிடே குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான, பாடும் பறவைகளின் வரிசையில் உள்ள ஓர் குருவி இனத்தைச் சேர்ந்த பறவையாகும்.
இந்த வன உயிரினங்கள் பச்சைக் கொண்டைக்குருவி, பழுப்புக் கொண்டைக்குருவி, இலைவிரும்பி, அல்லது முள்மயிர்க்குருவி ஆகியவை இவ்வினத்தால் அறியப்படுகின்றன.

இந்தப் பறவைக் குடும்பம் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி மற்றும் மத்திய கிழக்கு, வெப்பமண்டல ஆசியாவிலிருந்து இந்தோனேசியா மற்றும் வடக்கே ஜப்பான் வரை பரவியுள்ளன.

27 பேரினங்களில் 150 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு வகையான பல்வேறு இனங்கள் பரவலான வாழ்விடங்களில் காணப்படுகின்றன, ஆப்பிரிக்க இனங்கள் பெரும்பாலும் மழைக்காடுகளில் காணப்படுகின்றன.

கொண்டைக்குருவிகள் குறுகிய கழுத்து கொண்ட மெல்லிய பாடும் பறவைகள் ஆகும். இவற்றின் வால்கள் நீளமாகவும், இறக்கைகள் குறுகியதாகவும் வட்டமாகவும் இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments