Wednesday, May 1, 2024
Homeஅரசியல்செய்திகருணாநிதியின் குடும்பத்திற்கு என்றென்றும் விசுவாசமாக இருப்போம்_அமைச்சர் K.N நேரு

கருணாநிதியின் குடும்பத்திற்கு என்றென்றும் விசுவாசமாக இருப்போம்_அமைச்சர் K.N நேரு

சேலம்: கருணாநிதியின் குடும்பத்திற்கு என்றென்றும் விசுவாசமாக இருப்போம் என்று கூறியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம். வாரிசு அரசியல் என்று கூறியெல்லாம் எங்களை மிரட்டிவிட முடியாது. திமுக கழகத் தொண்டர்கள் எப்போதும் நன்றியுடன் இருப்பவர்கள் என்றும் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போதே அவரது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதே நேரத்தில் உதயநிதியின் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. திமுகவினர் பல மாவட்டங்களில் இருந்தும் தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தனர். உதயநிதி விரைவில் அமைச்சராக பொறுப்பேற்பார் என்று பலமுறை அமைச்சர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதியன்று அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். இதனையடுத்து திமுகவினர் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற உடன் தனது மகன் இன்பநிதியுடன் வீடியோகாலில் பேசினார்.

வாரிசு அரசியல்
உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடத்தப்பட்டதாகவும் வாரிசு அரசியல் பற்றியும் எதிர்கட்சியினர் பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் அமைச்சர்கள் பலரும் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு வாரிசு அரசியல் பற்றி பேசும் போது உதயநிதிக்கு மட்டுமல்ல அவரது மகனுக்கும் ஆதரவு தருவோம் என்று பேசியிருக்கிறார். சேலம் திமுக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு பேசினார். அப்பொழுது அவர், 1986 முதல் 2022 வரை, 32 ஆம் ஆண்டு காலத்தில் எனக்காக முதல் முறையாக போடப்பட்டுள்ள கூட்டம் என்பதால் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

அதிமுகவினர் மீது வழக்கு
சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்டவைகள் ஒவ்வொரு ஆட்சியிலும் நிர்வாக சீர்திருத்தம், விலை உயர்வின் போது அரசுக்கு செலவு ஈடுகட்டும் வகையில் உயர்த்துவது இயல்பான செயல். என் மீது 9 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டது. பல நிர்வாகிகள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முதல்வர் ஸ்டாலின் அதிமுக நிர்வாகிகள் மீது யார் மீதும் வழக்கு போடவில்லை. ஆனால் உங்கள் மீது வழக்குகள் போடாததால் தான் தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.
அதிமுகவின் கோட்டை
தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகம் பேசும் நிலையில் இனிவரும் காலங்களில், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். எடப்பாடி பழனிசாமி யாரை கண்டு பயப்படமாட்டோம் என்று கூறுகிறார். சேலம் எம்ஜிஆர், ஜெயலலிதா கோட்டையாக இருக்கலாம். இனிவரும் காலத்தில் தளபதி கோட்டையாக மாறும், எதிர்க்கட்சி நினைப்பது எப்போதும் நடக்காது. சேலத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெறும். அதிமுக கோட்டை என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலத்தில் திமுகவில் ஒரு எம்எல்ஏ இருக்கும் நிலையில் வருங்காலத்தில் 11 சட்டமன்ற உறுப்பினராக மாறுவார்கள் என்று கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments