Friday, May 17, 2024
Homeஇந்திய செய்திகள்கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு!

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு!

கர்நாடகாவில் 38 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 38 இலங்கை அகதிகள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10-06-2021 அன்று கைது செய்யப்பட்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர்களை விடுவித்த நீதிமன்றம், அவர்களை நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதற்கான ஏற்பாடுகளை செய்ய நீதிமன்றம் 15 நாட்கள் கால அவகாசம் அளித்த போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம்மை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாரை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் வருத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் விடுதியில் தங்கி இருப்பதாகவும், உணவு, மருத்துவ வசதிகள் இல்லை என்றும், சிலர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments