Saturday, May 18, 2024
Homeஇந்திய செய்திகள்கள்ள நோட்டை கண்டுபிடிப்பது எப்படி …! RBI வெளியிட்ட அதிகாரபூர்வமான தகவல் …இந்த டிப்ஸ் மூலம்...

கள்ள நோட்டை கண்டுபிடிப்பது எப்படி …! RBI வெளியிட்ட அதிகாரபூர்வமான தகவல் …இந்த டிப்ஸ் மூலம் கண்டறியலாம் …

கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், 2020 ஆம் ஆண்டில் மத்திய வங்கி புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இவை நிறம், அளவு மற்றும் தீம் ஆகியவற்றின் அடிப்படையில் பழைய நோட்டில் இருந்து வேறுபட்டன. தற்போது, நாட்டில் மீண்டும் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. உங்கள் கையில் இருக்கும் அல்லது கடைகளில் வாங்கும் 500 ரூபாய் நோட்டு நல்ல நோட்டா? அல்லது போலியானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என இங்கே காணலாம்.

மத்திய அரசு புதிதாக வெளியிட்ட 500 ரூபாய் நோட்டு பழைய நோட்டை விட முற்றிலும் வித்தியாசமானது. இந்த நோட்டில் பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்த இடமும் பழைய நோட்டில் இருந்து வித்தியாசமாக இருந்தது. அசல் 500 ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் மொத்தம் 17 அடையாளங்கள் உள்ளன. அவற்றை பற்றி காணலாம்.

அசல் நோட்டின் முதல் அடையாளம் என்னவென்றால், வெளிப்படையான முறையில் எண்களில் எழுதப்பட்ட 500 ஆகும். இதையடுத்து, கீழே ஒரு வட்டவடிவமான ரகசிய படம் உள்ளது. அதிலும், 500 என்று எழுதப்பட்டுள்ளது. மூன்றாவதாக தேவநாகரியிலும் (Devanagari) 500 எழுதப்பட்டிருக்கும். நான்காவது அடையாளம், நோட்டின் நடுவில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும்.

ஐந்தாவது அடையாளமான, Bharat மற்றும் India என நுண் எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். ஆறாவது அடையாளம், இந்தியா மற்றும் ரிசர்வ் வங்கி என்று எழுதப்பட்ட நோட்டின் நடுவில் உள்ள ஷிப்ட் விண்டோ பாதுகாப்பு நூல். நோட்டை சாய்க்கும் போது அதன் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறும்.

ஏழாவது அடையாளம் மகாத்மா காந்தியின் படத்தின் வலதுபுறத்தில் கவர்னரின் கையொப்பத்துடன் கூடிய உத்தரவாத வாக்கியம் மற்றும் RBI குறி இருக்கும். 8-வது அடையாளம் : மகாத்மா காந்தியின் படம் மற்றும் 500 என்ற வாட்டர்மார்க் காலியிடத்தில் மறைக்கப்பட்டிருக்கும். 9-வது அடையாளம், நோட்டின் கீழ் வலது பக்கத்தில் ஏறுவரிசையில் இருக்கும் எண்கள். 10-வது அடையாளம் ரூ. 500 (பச்சை முதல் நீலம் வரை) கீழ் வலதுபுறத்தில் வண்ணத்தை மாற்றும் மையில் எழுதப்பட்டுள்ளது.

11 வது அடையாளம் வலது பக்கத்தில் உள்ள அசோக தூணின் சின்னம். 12-வது அடையாளம் பார்வையற்றோருக்கான பிரத்யேக அடையாளம் – மகாத்மா காந்தி மற்றும் அசோகத் தூணின் எம்போஷிங் உருவப்படம், வலதுபுறத்தில் மைக்ரோடெக்ஸ்டில் ₹500 மற்றும் 5 கோண ரத்தக் கோடுகள் கொண்ட வட்ட அடையாளக் குறி.

13 வது அடையாளம் இடது பக்கத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு, 14 வது அடையாளமாக ஸ்வச் பாரத் என்ற முழக்கம் உள்ளது. 15வது அடையாளம் மொழிப் பலகம், 16வது அடையாளம் செங்கோட்டையின் வடிவம் மற்றும் 17வது அடையாளம் தேவநாகரியில் 500 எழுதப்பட்டுள்ளது. இந்த நோட்டின் அளவு 66mm *150 mm – ல் இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments