தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 யில் போட்டியாளராக இலங்கைப் பெண் ஜனனி கலந்துகொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் சிறப்பாக விளையாடி மக்கள மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் ஜனனி நடிப்பதாக தகவல் சமூக வலைதளங்களில் வெளிவந்தன.
இதேவேளை, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஜனனி அண்மைக்காலமாக புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தில் நயன்தாரா அணிந்த சேலை போன்ற அவரும் சாரி மற்றும் தாலி அணிந்து ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.