Monday, May 6, 2024
Homeஆன்மீகம்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தை மாத தெப்ப உற்சவம் கோலாகலம்..

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தை மாத தெப்ப உற்சவம் கோலாகலம்..

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற 3500 ஆண்டுகள் பழமையானதும், பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் தை மாத தெப்ப உற்சவம் நடைபெற்றது. தை மாத தெப்ப உற்சவத்தையொட்டி ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் குளத்தில்மாவிலை தோரணம், வாழைமரம் கட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார்க் குழலி அம்மன் எழுந்தருளி குளத்தில் 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தை மாத தெப்ப உற்சவத்தை காண காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து தெப்பத்தில் வலம் வந்த சுவாமியை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments