Saturday, April 27, 2024
Homeஅரசியல்செய்திகாலணி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியேறி, நமது பாரம்பரியம் மீது பெருமைகொள்ள வேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி.

காலணி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியேறி, நமது பாரம்பரியம் மீது பெருமைகொள்ள வேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னையில் சின்மயா வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரத நாடு மட்டுமே உலகில் அனைவரும் சமம் என்ற பார்வையைக் கொண்டது என கூறினார்.

பகவத்கீதையை போன்ற சிறந்த புத்தகம் என்னை பொருத்தவரை வேறில்லை. வாழ்க்கைக்கான அனைத்தும் கீதையில் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், “ஆங்கில ஆட்சியே உயர்வானது என்ற காலணி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியேறி, நமது பாரம்பரியம் மீது பெருமைகொள்ள வேண்டும். ஆங்கிலேயே ஆட்சி மகிழ்வானது என்று உயர் பதவியில் இருக்கும் சிலர் பேசுகின்றனர், இது பரிதாபத்திற்குரியது. ஆங்கிலேய காலத்தில் இருந்து பிரிவினை மேலோங்கியது அது இனம், மதம் என தற்போதும் தொடர்கிறது அதனை மறந்து அனைவரும் ஒன்றே என்கிற எண்ணத்துடன் வளர வேண்டும்” என்று கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments