Thursday, May 9, 2024
Homeவிளையாட்டுகால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே காலமானார்

கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே காலமானார்

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வது வயதில் காலமானார் .

அவர் செப்டம்பர் 2021 முதல் பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி வருகிறார் மற்றும் இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்றார்.

புற்றுநோயுடன் நீண்ட காலமாகப் போராடி வந்த பீலே இறந்துவிட்டதாக அவரது முகவர் மற்றும் குடும்பத்தினர் இன்று உறுதிப்படுத்தினர்.

கடந்த சில நாட்களாக கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில் பீலேவுக்கு கடைசி கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பீலே, புற்றுநோய் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை பலவீனமடைந்தது.

இதன் விளைவாக, அவர் சிகிச்சைக்காக சாவ் பாலோ மாகாணத்தின் போல்ஹாவில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர், ‘பலியேட்டிவ் கேர்’ பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மூன்று முறை உலகக் கோப்பையை வென்றவர் (1958, 1962, 1970).

பிரேசில் அணிக்காக 77 கோல்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments