Friday, May 10, 2024
Homeஅரசியல்செய்திகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வர்த்தக மையம் அமைப்பதற்கான நடவடிக்கை -அமைச்சர் தங்கம் தென்னரசு .

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வர்த்தக மையம் அமைப்பதற்கான நடவடிக்கை -அமைச்சர் தங்கம் தென்னரசு .

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வர்த்தக மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் இடையே வர்த்தக மையம் அமைக்க அரசு முன்வருமா என சட்டப்பேரவையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறை நிறுவனம் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் இணைந்து உருவாக்கிய தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் கிருஷ்ணகிரி-

ஓசூர் இடையே மையம் அமைக்க கொள்கை அளவு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

இதனையடுத்து மீண்டும் குறிப்பிட்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் தொழிற்சாலைகள் உள்ளன வர்த்தக மையம் வெளிநாட்டின் நகர் வந்து செல்லும் இடமாகவும் அதிக அளவில் அன்னிய செலாவணியை ஈர்க்கும் மண்டலமாகவும் அது மாறும் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments