Sunday, April 28, 2024
Homeதொழில்நுட்பம்கூகுளிலில் கலக்கும் இந்தியர்கள் ..!! யூடியூப் -க்கு 'சிஇஓ'வாக நியமனம் ஆனா இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த...

கூகுளிலில் கலக்கும் இந்தியர்கள் ..!! யூடியூப் -க்கு ‘சிஇஓ’வாக நியமனம் ஆனா இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த நீல் மோகன் .

உலகின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக விளங்கும் யூடியூப்-இன் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த நீல் மோகன் பொறுப்பேற்கிறார்.

உலகின் டாப் டெக் நிறுவனமாக திகழ்வது ஆல்பாபெட். இந்த நிறுவனத்தின் கீழ் தான் முன்னணி டெக் நிறுவனங்களான கூகுள், யூடியூப் போன்றவை இயங்கி வருகிறது. இந்த ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் தான் கூகுள் நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். அதேவேளை, வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்பை 54 வயதான சூசன் வோஜ்சிச்கி சிஇஓவாக இருந்து நிர்வகித்து வந்தார். இவர் சுமார் 25 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தான் யூடியூப்பின் சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக சூசன் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து யூடியூப்-இன் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி பதவியில் இருந்து வந்தார். யூடியூப்-இல் ஷார்ட்ஸ் வீடியோக்கள் உருவாக்குவதில் பிரதானம் கவனம் செலுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியவர். இதற்கு முன்பாக இவர் ஆக்சென்சர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

பேஸ்புக், டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், நெட்பிளிக்ஸ் ஸ்டீரீமிங் தளம் ஆகியவற்றின் வருகைக்கு பின்னர் யூடியூப் தனது வளர்ச்சியில் கடும் சவாலை சந்தித்துள்ளது. எனவே, இதை எதிர்கொள்ளவதே புதிய தலைவர் நீல் மோகனுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.

உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் தற்போது இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி கோலாச்சி வருகின்றனர். மைக்ரோசாப் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் சத்திய நாதெல்லாவும், ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அரவிந்த் கிருஷ்ணாவும், ஸாட்ர்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் லக்ஷ்மி நரசிம்மனும் உள்ளனர். தற்போது நீல் மோகனுக்கு கிடைத்த பொறுப்பு புதிய மகுடமாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments