Monday, May 6, 2024
Homeஇலங்கை செய்திகள்சட்டத்தரணியின் வளர்ப்பு நாய்க்கு நஞ்சு வைத்த பெண் சட்டத்தரணி கைது!

சட்டத்தரணியின் வளர்ப்பு நாய்க்கு நஞ்சு வைத்த பெண் சட்டத்தரணி கைது!

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரின் மகனான சட்டத்தரணியின் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு விஷம் வைத்து கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி (25) கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் உயர் நீதிமன்றத்தின் பெண் சட்டத்தரணி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 12ம் திகதி கிரிவட்டுடுவ, தலகல வத்த பிரதேசத்தில் உள்ள மனுதாரர் சட்டத்தரணியின் வீட்டைச் சுற்றி பல இடங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிறிய அளவிலான சில பொதிகள் காணப்பட்டன. அதனைப் பார்த்த பணிப்பெண் சட்டத்தரணிக்கு அறிவித்து, விசாரணைகளை மேற்கொண்ட போது திடீரென நாய் சளி, இருமலுடன் தரையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது.

அதன்படி, கால்நடை மருத்துவர் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு நாயை பரிசோதித்தபோது, ​​நாய் ஏதோ விஷத்தை உட்கொண்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, கடந்த 12ம் திகதி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களை ஆய்வு செய்தபோது, ​​வீட்டின் முன்புறம் உள்ள பிரதான வாயில் அருகே சிவப்பு நிற கார் ஒன்று வந்ததையடுத்து, அதிலிருந்து இறங்கிய ஒருவர் தோட்டத்துக்குள் பொருட்களை வீசுவது தெரிந்தது.

இதனடிப்படையில் சம்பவம் தொடர்பில் வீட்டின் சட்டத்தரணி கஹதுடுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சந்தேகத்திற்கிடமான கார் உயர்நீதிமன்றத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு சொந்தமானது என தகவல் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, சந்தேகநபரான சட்டத்தரணியை கடந்த 25ஆம் திகதி பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, ​​வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இரு தரப்புக்குமிடையில் நீண்டகால மோதல் நிலவி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments