Thursday, May 16, 2024
Homeஇலங்கை செய்திகள்சீனாவின் சாதகமான பதிலின்மையே IMF பிணையெடுப்பு தாமதத்துக்கு காரணம் - விஜயதாச.

சீனாவின் சாதகமான பதிலின்மையே IMF பிணையெடுப்பு தாமதத்துக்கு காரணம் – விஜயதாச.

இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் விடயத்தில் சீனா இன்னும் சாதகமாக பதிலளிக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியாவும் பாரிஸ் கிளப்பும் உத்தரவாதம் அளித்துள்ளன.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதியைப் பெறுவதற்கான
இலங்கையின் முயற்சியில் எஞ்சியிருக்கும் தடையாக சீனா இருப்பதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த பெரும்பாலான நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகவும், தற்போது சீனா மட்டுமே தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து நிலையை அறிவித்துள்ள இலங்கை, பொருளாதார ரீதியாக நிலையான நாடாக கருதப்படுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவை எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments