Friday, May 3, 2024
Homeஉலக செய்திகள்சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… நிமிடத்திற்கு 700பேர் பாதிக்கப் படுவதகா தகவல்…நாளுக்கு 5000பேர் பலி.

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… நிமிடத்திற்கு 700பேர் பாதிக்கப் படுவதகா தகவல்…நாளுக்கு 5000பேர் பலி.

பெய்ஜிங்: புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலகெங்கும் கொரோனா பரவல் குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் குறித்த அதிர்ச்சியூட்டும் வார்னிங் வெளியாகியுள்ளது.

உலகமே கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தான் கொரோனா பரவல் மீண்டும் சீனாவில் அதிகரித்துள்ளது. எங்கு இது மீண்டும் ஒரு கொரோனா அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெய்ஜிங்: புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலகெங்கும் கொரோனா பரவல் குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் குறித்த அதிர்ச்சியூட்டும் வார்னிங் வெளியாகியுள்ளது.

உலகமே கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தான் கொரோனா பரவல் மீண்டும் சீனாவில் அதிகரித்துள்ளது. எங்கு இது மீண்டும் ஒரு கொரோனா அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜீரோ கோவிட் பாலிசியை எப்போது சீனா விலக்கிக் கொண்டதோ, அப்போது முதலே அங்கு வைரஸ் பாதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே சீனாவில் சமீப காலங்களாக திடீரென அதிகரிக்கும் கொரோனா பரவல் குறித்து ஆய்வாளர்கள் முக்கிய வார்னிங்கை கொடுத்துள்ளனர்.

சீனா
சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு சமீபத்தில் தான் விலக்கிக் கொண்டது. இத்தனை காலம் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தது.. இதனால் வைரஸ் பாதிப்பு ஏற்படுவோரும், அவரை சுற்றியுள்ளவருக்கும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாகவே அங்கு வைரஸ் பாதிப்பு இத்தனை காலமாகக் கட்டுக்குள் இருந்தது. மேலும், இதனால் அங்குப் பெரும்பாலானோருக்கு தடுப்பாற்றல் போதியளவுக்கு இல்லை.

தாண்டவமாடும் கொரோனா
இதுவே அங்கு இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. சீனாவில் இப்போது ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், தினசரி 5,000 பேர் வரை கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். சீனா கொரோனா பரவல் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியிடத் தயக்கம் காட்டுகிறது. இருப்பினும், உலகில் இதுவரை ஏற்பட்ட அலைகளில் இது மோசமானதாக இருப்பதால், இந்தளவுக்கு வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்

மேலும் மோசமாகும்
140 கோடி பேர் வாழும் சீனாவில் நிலைமை இன்னும் கூட மோசமாகலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அலையில் வரும் ஜனவரி மாதம் அங்கு மேலும் அதிகரிக்கும் என்றும் தினசரி பாதிப்பு 37 லட்சம் வரை செல்லும் என்றும் லண்டன் ஏர்ஃபினிட்டி லிமிடெட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே அதன் பரவலைத் துல்லியமாகக் கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகும் கூட சீனாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் வரும் மார்ச் மாதம் இது அதிகபட்சமாகத் தினசரி 42 லட்சம் வரை செல்லும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்
சீனாவில் அமலில் இருந்து ஜீரோ கோவிட் பாலிசி திடீரென நீக்கப்பட்டதே வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு அதிகரிக்க முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக அங்குப் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை ஏற்படாமல் இருந்தது. இதனால் அவர்களுக்கு தடுப்பாற்றலும் இல்லாமல் இருந்தது. இப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடன் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதேபோல சீனாவில் அவர்களின் சினோவார்ம் மற்றும் சினவோக் வேக்சின் தான் அளிக்கப்பட்டது. அதன் தடுப்பாற்றலும் மிகக் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ தகவல்
சீனா கடந்த புதன்கிழமை தனது நாட்டில் ஒட்டுமொத்தமாகவே 2,966 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளதாகக் கூறியுள்ளது. இருப்பினும், இதை வல்லுநர்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்துமே நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அங்குள்ள மயானங்களிலும் உடல்கள் அணிவகுத்து நிற்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசு அறிவிக்கும் தகவல்களைக் காட்டிலும் உண்மையில் கொரோனா பாதிப்பு பல மடங்கு இருக்கும் என்றே வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments