Friday, May 3, 2024
Homeஉலக செய்திகள்சீன உளவு பலூன் ‘செல்பி’- வெளியிட்டது பென்டகன்.

சீன உளவு பலூன் ‘செல்பி’- வெளியிட்டது பென்டகன்.

60 ஆயிரம் அடி உயரத்தில் எடுக்கப்பட்ட சீன உளவு பலூன் ‘செல்பி’ படத்தினை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராணுவ தளங்களை கண்காணிக்க சீன உளவு பலூன் பறக்க விடப்பட்ட நிலையில்,
அது தெற்கு கரோலினாவில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்துவதற்கு முன்பாக, 60 ஆயிரம் அடி உயரத்தில்,
அதைக் கண்காணித்த ‘எப்-2 ராப்டர்’ போர் விமானத்தின் விமானி எடுத்த ‘செல்பி’ படத்தை அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது.

அந்தப் படம் சீன உளவு பலூனின் மர்மமான வெள்ளை கோளத்தில் பனல்கள் தொங்குவதைக்
காட்டுகிறது. பலூனுக்கு எதிராக தாக்குதல் தொடுத்த அமெரிக்க விமானத்தின் நிழலின் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியையும் அது வெளிப்படுத்தியது.

இந்த ‘செல்பி’ படம், அமெரிக்க கண்டத்துக்கு மேலே உள்ள வான்வெளியில் அதிக உயரத்தில்
பலூன் நுழைந்தபோதே, விமானப்படை வீரரால் எடுக்கப்பட்டது என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments