Tuesday, April 30, 2024
Homeஇந்திய செய்திகள்சென்னைக்கு வரும் அடுத்த புயல் எச்சரிக்கை ! சென்னையை நோக்கி திரும்பும் காற்றழுத்த தாழ்வு பகுதி.

சென்னைக்கு வரும் அடுத்த புயல் எச்சரிக்கை ! சென்னையை நோக்கி திரும்பும் காற்றழுத்த தாழ்வு பகுதி.

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் மழையை உருவாக்கியது. இது கடந்த 10ம் தேதி சென்னையையொட்டி கரையை கடந்த பின்னரும் மழை தொடர்ந்து பெய்தது.

இப்புயல் விட்டுச் சென்ன மழை மேகங்கள் காரணமாக வட மற்றும் உள் மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பின.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீர் அதிக அளவு திறந்துவிடப்பட்டன. இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. மாண்டஸ் அரபிக் கடலில் கலந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மீண்டும் உருமாறி மேற்று நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது இதானல் பெரிய அளவு பாதிப்பு இல்லையென்றாலும் தென்கிழக்கு வங்கக்கடலில் புதியதாக வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மெல்ல வலுவடைந்து இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் மேலும் இது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வரும் 17ம் தேதி வரை மேற்கு நோக்கி நகரும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல வரும் நாட்களில் இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி இலங்கையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடைசி புயல் ஒருவேளை வானிலை ஆய்வு மையம் கணித்ததை போல புயல் உருவானால் இந்த ஆண்டின் கடைசி புயல் இதுவாகதான் இருக்கும். அதேபோல இப்புயல் டெல்டா மாவட்டங்களையொட்டி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கடந்த இரண்டு வாரங்களாக சென்னை மற்றும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் பரவலான மழை இருந்த நிலையில் இந்த புயலும் கனமழையை உருவாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் வாடல் நோயால் பாதிப்பு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அறுவடை காலம் தற்போது அறுவடை காலம் நெருங்கி வருவதால் மழை மேலும் நீடித்தால் பருத்தியை அறுவடை செய்ய முடியாது என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல அடுத்து வரும் சில நாட்களில் நெல் மற்றும் கரும்பு அறுவடை செய்ய உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் புயல் தாக்கினால் இந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைய வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் எதிர் வரும் மழைக்கு தாக்கு பிடிக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments