Monday, April 29, 2024
Homeஇலங்கை செய்திகள்ஜனாதிபதி மாளிகையில் பணம் எண்ணிய இளைஞன் கைது!

ஜனாதிபதி மாளிகையில் பணம் எண்ணிய இளைஞன் கைது!

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்திற்கு பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14, மல் மாவத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொழும்பு ஹுசேனியா வீதியிலுள்ள கடையொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பொதுமக்கள் அரச கட்டிடத்தை முற்றுகையிட்டதன் பின்னர் காணப்பட்ட பணத்தை எண்ணிக் கொண்டிருந்த குழுவைச் சேர்ந்தவர் சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை எதிர்ப்பாளர்கள் குழுவொன்று எண்ணும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதன் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments